ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: சுட்ட போலீஸ் தரப்பிடம் விசாரணை தொடங்குகிறது!
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையினை தூத்துக்குடியில் இருந்து அகற்றக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே 22ஆம் தேதி நடத்திய போராட்டத்தில் தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அப்போதைய தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி ஆலையினை பூட்டி சீல் வைத்தது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா மாதம்தோறும் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் வைத்து விசாரணை செது வருகிறார்.
இந்த சூழலில் கடந்த 13ஆம் தேதி முதல் 30ஆவது கட்ட விசாரணை நடைபெற்றுக் வருகிறது. இந்த விசாரணை குறித்து ஒரு நபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்:
இதுவரை 1231-ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு 938 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு உள்ளது.
30ஆவது கட்ட விசாரணையில் 127 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 75 பேர் இதுவரை விசாரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்டெர்லைட் குடியிருப்பில் கலவரத்தின் போது குடியிருந்த 53 பேரிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது.
அனைவரும் தற்போது கேரளா, ஜார்கண்ட், கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்
குடியிருந்து வருகின்றனர். இருந்தபோதும் அவர்கள் நேரடியாக வந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரை வரும் திங்கட்கிழமை முதல் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆணையத்தின் இந்த 30-ம் கட்ட விசாரணை வரும் 23-ம் தேதி வரை மொத்தம் 10-நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment