ஸ்டெர்லைட் உதயகுமார் ஆதரவாளர்கள் வழக்கு ரத்து: முக ஸ்டாலினுக்கு தேர்தலில் கைக்கொடுக்குமா?
கூடன்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் கூடன்குளத்தில் 5-வது 6-வது அணு உலையை அமைக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
முதல்வர் முக ஸ்டாலின்
தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 26 வழக்குகளை ரத்து செய்து உள்ளார்.
அதற்கு அணு உலைக்கு எதிராக போராடிய மக்கள் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவைத் தவிர 63 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனால் வெளிநாடுகள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் தடையில்லா சான்று பெறமுடியவில்லை. எனவே அதனையும் ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
தற்போது கூடன்குளத்தில் 5 ஆவது 6ஆவது அணு உலை அமைக்கும் பணி நடக்கிறது. முதல் இரண்டு அணு உலைக்கள் அமைக்கும் போது மக்கள் போராட்டத்தல் ஈடுபட்டனர். அப்போது தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம் பலகோடி ரூபாய் செலவு செய்த பின்பு போராட்டத்தில் ஈடுபடுகிறேர்கள் என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
தற்போது 5ஆவது 6ஆவது அணு உலை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த அணு உலைகள் வேண்டாம் என மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அண்மையில்
இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “இந்த 5 மற்றும் 6ஆவது அணு உலை தேவை குறித்து ஆய்வு செய்து நெல்லை மாவட்ட மக்களின் கருத்துக்களை கேட்டுதான் இறுதிமுடிவு எடுக்கப்படும்” என்றார்.
அமைச்சரின் இந்த கருத்தை வரவேற்கிறோம் கூடன்குளம் அணுமின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு மக்கள் கருத்துக்களை கேட்டுத்தான் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசுக்கு வைக்கிறோம். வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என நம்புகிறோம். இது குறித்து உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் உரிய முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment