இந்த வருஷமும் கண்டிப்பாக நடக்கும்; ஆனா ஏழுமலையான் பக்தர்கள் சோகம்!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 9 நாட்கள் நடைபெறும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவர். நான்கு மாட வீதிகள் வழியாக பல்வேறு வாகனங்களில் சாமி ஊர்வலம் நடத்தப்பட்டு கோலாகலமாக விழா நடைபெறும்.
கருட சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களை விட ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தில்
இரண்டு மடங்கு எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொள்வர். அதாவது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. அதேபோல் நடப்பாண்டும் அக்டோபர் 7 முதல் 15ஆம் தேதி வரை பக்தர்கள் இல்லாமல் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த விஷயத்தில் தேவஸ்தானம் மிகுந்த கவனத்துடன் செயல்படும். திருமலையில் கொரோனா பரவல் ஏதும் ஏற்படாமல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். பக்தர்களிடம் போதிய சரீர இடைவெளி, முகக்கவசம் அணிதல்
போன்றவை கண்டிப்பாக கடைபிடிக்கப்படும்.
தற்போது சுமார் 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தினசரி பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். ஏழுமலையான் பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனும், ஆரோக்கியமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இதன் காரணமாக 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்துள்ளோம்.
No comments:
Post a Comment