பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க போகிற திட்டம் இது தான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க போகிற திட்டம் இது தான்!

பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க போகிற திட்டம் இது தான்!

ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை செப்டம்பர் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தின் மாதிரி திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தற்போது 6 யூனியன் பிரதேசங்களில் இந்த மாதிரித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சியான ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் தொடங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணம் செலுத்தும் முறையில் புரட்சியை ஏற்படுத்திய ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் வசதியைப் போல இந்த இயக்கம் மின்னணு சுகாதார சூழலியலுக்குள் இயங்குத்தன்மைக்கு வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad