அனைத்து ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை; வெளியான ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

அனைத்து ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை; வெளியான ஹேப்பி நியூஸ்!

அனைத்து ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை; வெளியான ஹேப்பி நியூஸ்!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதற்கு பலனாக நோய்த்தொற்று பெரிதும் கட்டுக்குள் வந்தது. மேலும் கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை மாநில அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதிகப்படியான மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்முறை கடந்த 12ஆம் தேதி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 28.91 லட்சம் பேருக்க ு தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டது.




மெகா தடுப்பூசி முகாம்

இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயித்து, 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று (செப்டம்பர் 26) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தினசரி தொற்று 36 ஆயிரத்திற்கும் மேல் இருந்த நிலையில் 1,500க்கும் கீழ் குறைந்தது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தற்போது சற்றே அதிகரித்து 1,800 என்ற அளவில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கட்டுப்பாடுகளை மீறுவதால் பாதிப்புகள் சற்றே ஏற்றம் கண்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா சூழலை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 56 சதவீத பேர் குறைந்தது ஒருடோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் 17 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டனர்.

சிறப்பு விடுமுறை அறிவிப்பு


இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதை தவிர்க்கக் கூடாது. தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவது, முகக்கவசங்கள் முறையாக அணிவது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தாமாக வந்து முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்கிடையில் இன்று நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாமை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஓய்வு தரும் வகையில், நாளை (செப்டம்பர் 27) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் நாளைய தின தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad