பள்ளிகளில் இனி இதெல்லாம் கட்டாயம்; கல்வித்துறை புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

பள்ளிகளில் இனி இதெல்லாம் கட்டாயம்; கல்வித்துறை புதிய உத்தரவு!

பள்ளிகளில் இனி இதெல்லாம் கட்டாயம்; கல்வித்துறை புதிய உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பில் மாநில அரசு கவனம் செலுத்தத் தொடங்கியது. கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப் பட்டுள்ளனர். வகுப்பறைகளில் 50 சதவீத மாணவர்கள் வீதம் சுழற்சி முறையில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு வர பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியம். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேசமயம் ஆன்லைன் வாயிலான கற்பித்தல் விஷயங்களை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் அடுத்தகட்ட திட்டம்

முதல் இரண்டு வாரங்களில் சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. உடனே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப் பணிகள் நடைபெற்றன. கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சில நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பரவல் ஏதுமின்றி இயல்பு நிலை திரும்பியுள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்டமாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வரவழைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அடுத்தகட்டமாக பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று மாநில அரசு கருதுகிறது. எனவே உரிய நேரத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடக்கக்கல்வி இயக்ககம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்ககம் அனுப்பி வைத்துள்ளது

புகார் பெட்டியும், பெண் குழந்தைகள் பாதுகாப்பும்


அதில், அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும். அதில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பெண் காவல்துறை அலுவலர், பெண் மனநல மருத்துவர் ஆகியோர் இடம்பெற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி அமைக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட குழுக்களைச் சேர்ந்தவர்கள் வாரத்தில் ஒருநாள் பள்ளிகளுக்கு சென்று புகார் பெட்டியை ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் இருந்தால், அதை காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் மகளிர் காவல் நிலையத்தின் தொடர்பு எண்கள் இடம்பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad