ரயில் நிலையங்களில் இப்படியொரு கெடுபிடி; கறார் காட்டும் தெற்கு ரயில்வே!
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரதமர் மோடி அமல்படுத்திய போது, தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதேசமயம் சரக்கு ரயில் சேவை மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. பின்னர் புலம்பெயர் தொழிலாளர்கள் வசதிக்காக சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த சேவை பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் ஆன்லைன் வாயிலாக டிக்கெட்கள் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இயல்பு நிலைக்கு திரும்பிய சேவை
கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா முதல் அலையின் பாதிப்புகள் பெரிதும் குறைந்தன. இந்நிலையில் வழக்கமான பயணிகள் ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இயக்கப்பட்டன. பின்னர் பயணிகளின் தேவைக்கேற்ப இந்த சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலை காணப்படுகிறது. இந்த சூழலில் ரயில் போக்குவரத்து முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எழுச்சி
நாள் விழா
இந்நிலையில் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் யாரும் உள்ளே வரக்கூடாது என்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை தலைமை துணை ஆணையர் தெரிவித்துள்ளார். முன்னதாக திருச்சி காஜாமலையில் உள்ள தெற்கு ரயில்வே பாதுகாப்பு பயிற்சி பள்ளி மைதானத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) 36வது ஆண்டு எழுச்சி நாள் விழா நடைபெற்றது.
No comments:
Post a Comment