ஓட்டுப் பெட்டியை மாத்திடுவாங்க; பயம் காட்டிய ஈபிஎஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

ஓட்டுப் பெட்டியை மாத்திடுவாங்க; பயம் காட்டிய ஈபிஎஸ்!

ஓட்டுப் பெட்டியை மாத்திடுவாங்க; பயம் காட்டிய ஈபிஎஸ்!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து அதன் மீதான பரிசீலனை நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது. மறுபுறம் அமமுகவில் இருந்து விலகி தேமுதிகவும் தனித்து களம் காண்கிறது. இதற்கிடையில் அதிமுக உடன் சில இடங்களில் பாஜக மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக, பாஜக மோதலா?

குறிப்பாக உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் அதிமுக விநியோகிக்கும் துண்டு பிரசுரங்களில் பாஜகவின் சின்னமோ, தலைவர்களோ இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூட்டம், வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

திமுகவின் தில்லுமுல்லு

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களவை, சட்டமன்ற தேர்தலை விட மிக முக்கியமான தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல். ஏனெனில் மக்களுக்கு நேரடியாக பணி செய்வதற்கு இந்த தேர்தல் தான் வழிவகுக்கும். நாம் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இருப்பினும் நம்முடைய வேட்பாளர்களை பார்க்கும் போது வெற்றி பெற்றுவிட்டதாகவே தோன்றுகிறது. வரும் உள்ளாட்சி தேர்தலில் நமது எதிரிகள் குறுக்கு வழியில் செயல்படக் கூடும். குறிப்பாக திமுகவினர் நிச்சயம் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிப்பர். அதையும் மீறி நாம் வெற்றி பெற வேண்டும்.

ஓட்டுப் பெட்டிகள் மீது கவனம்


கடந்த முறை அதிமுக ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றது. தற்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் இரண்டு மாவட்ட வார்டு உறுப்பினர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. திட்டமிட்டே செய்துள்ளனர். இதற்கு மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப் பெட்டிகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது கட்சி நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கூடவே சென்று சீல் வைக்கும் வரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் ஓட்டுப் பெட்டிகளை மாற்றிவிடுவார்கள். வாக்குகள் எண்ணும் போது ஏஜெண்டுகளை திமுகவினர் திசை திருப்பி விடுவர். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் அதிமுகவிற்கு 100 சதவீத வெற்றி கிடைக்கும் வகையில் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad