புதுமண தம்பதிக்காக நடுவழியில் காரை நிறுத்திய முதலமைச்சர்! - வைரல் வீடியோ!
பஞ்சாப் மாநிலத்தில், பதிண்டா என்ற இடத்திற்கு ஆய்வுக்காக வந்த அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, செல்லும் வழியில், புதுமண தம்பதியை வாழ்த்துவதற்காக தனது காரை நடுவழியில் நிறுத்தி வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, பதிண்டா என்ற மாவட்டத்திற்கு ஆய்வுக்காக வந்தார். மண்டி காலன் என்ற கிராமம் வழியே சென்ற அவர், செல்லும் வழியில், திருமணக் கோலத்தில், மணமகன் - மணமகள் ஆகியோரை பார்த்தார்.
உடனடியாக தனது காண்வாயை நடுவழியில் நிறுத்திய முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, காரில் இருந்து இறங்கி, புதுமணத் தம்பதியை வாழ்த்தினார். மேலும், திருமண வீட்டார் கொடுத்த இனிப்பையும் சாப்பிட்டார்.
ஆனால், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, போலீசார், புதுமண தம்பதி உட்பட யாரும் முகக் கவசம் அணியவில்லை. இது தொடர்பான வீடியோ பஞ்சாப் மாநில முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவையில், 6 புது முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment