கரையை கடக்க துவங்கியது குலாப் புயல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

கரையை கடக்க துவங்கியது குலாப் புயல்!

கரையை கடக்க துவங்கியது குலாப் புயல்!




வங்கக் கடலில் கடந்த 24ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு ‘குலாப்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த குலாப் புயலானது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய கலிங்கப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே இன்று மாலை கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


அதன்படி, குலாப் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. “மேகக் குழுக்கள் கடலோரப் பகுதிகளைத் தொட்டுள்ளன. வடக்கு கரையோர ஆந்திரா மற்றும் ஒடிசாவின் தென்கரையோரத்தில் புயல் கரையை கடக்கும் செயல்முறை தொடங்கியுள்ளது. கலிங்கப்பட்டினத்திலிருந்து வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள கலிங்கப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே புயல் கரையை கடக்கும். இந்த செயல்முறை அடுத்த மூன்று மணி நேரம் நீடிக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலையொட்டி, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் தொடர்பான உதவி மைய எண்களையும் அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கடந்த மே மாதம் யாஸ் புயல் ஒடிசாவை தாக்கிய நிலையில், தற்போது ஒடிசாவில் குலாப் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. கஞ்சம், கஜபதி, கந்தமால், கோராபுட், ராயகடா, நபரங்க்பூர் மற்றும் மல்கன்கிரி ஆகிய ஏழு அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் புயல் காரணமாக உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.



இந்த இடங்களுக்கு ஒடிசா பேரிடர் ரேபிட் ஆக்‌ஷன் ஃபோர்ஸின் 42 குழுக்களும், பேரிடர் தேசிய பேரிடர் மீட்பு படையின் 24 குழுவினரும், 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒடிசா முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad