நிலக்கரி கொள்முதல் முறைகேடு: விசாரிச்சுக்கோங்க - தங்கமணி பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

நிலக்கரி கொள்முதல் முறைகேடு: விசாரிச்சுக்கோங்க - தங்கமணி பேச்சு!

நிலக்கரி கொள்முதல் முறைகேடு: விசாரிச்சுக்கோங்க - தங்கமணி பேச்சு!

மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை மீதான மானிய கோரிக்கையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பேரவையில் பேசினார்.
அப்போது அவர், “தடையில்லா மின்சாரம் வழங்கினால் தான் ஒரு மாநிலம் தலைசிறந்த மாநிலமாக திகழும். எந்த ஒரு மாநிலமும் சுய உற்பத்தியில் மின்தேவையை பூர்த்தி செய்ய முடியாது, அன்று 10 மணி நேரம் 12 நேரம் மின்வெட்டாக இருந்த நிலையை மாற்றினோம்.
கடந்த 10 ஆண்டுகளில் 701 துணை மின்நிலையங்கள் அமைத்துள்ளோம், 60,000 மின் மாற்றிகள் கடந்த 4 ஆண்டுகளில் மாற்றி உள்ளோம்.

100 யூனிட் இலவச மின்சாரத்தால் 2.27 கோடி குடும்பத்தினர் பயன்பெற்று உள்ளனர், குறிப்பாக 77 லட்சம் பேர் முழுமையான மின்கட்டண விலக்கு பெற்றனர்.கேங் மேன், லைன் மேன் பணியிடங்களில் 92,000 பேர் கலந்து கொண்டனர் முழுமையான வீடியோ பதிவு முறையில் தேர்வு பதிவு செய்யப்பட்டது. இதில் 9700 பேருக்கு நியமான முறையில் பணிநியமன ஆணையை கடந்த ஆட்சியில் வழங்கினோம். மின் உற்பத்தி துவங்கவில்லை என கூறுகிறீர்கள், நாங்கள் ஒப்பந்தம் போட்டோம் நீங்கள் துவங்கினீர்கள், அதே போல் நீங்கள் போட்டால் நாங்கள் துவங்கி உள்ளோம், அதனால் துவங்கவில்லை என கூறவது தவறு.கூடங்குளம் 3ஆவது , 4ஆவது அலகை துவங்கினால் மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை கொரானா இருந்த காரணத்தில் பழைய கட்டணத்தை செலுத்த கூறினோம் ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்த உடன் பழைய கட்டணத்தை செலுத்த கூறீர்கள்” என தெரிவித்தார்.


இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்கட்டணத்தை எளிய முறையில் செலுத்த 3 வாய்ப்புகளை வழங்கினோம், கடந்த மே மாத கட்டணத்தை செலுத்தலாம், செல்போன் குறுஞ்செய்தி மூலம் படம் எடுத்து அனுப்பலாம், நேரடியாக உபயோகித்த யூனிட் மூலம் அனுப்பலாம்”

No comments:

Post a Comment

Post Top Ad