நகைக்கடன் தள்ளுபடி: வெளிச்சத்திற்கு வந்த அதிமுக கூட்டுறவு வங்கி சித்து விளையாட்டு, நாமக்கல்லில் ஃபுல் லாக்!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலியான மாற்றுக் குறைந்த தங்க நகைகளுக்குக் கூடுதல் பணம் கொடுத்ததாக கூறி கூட்டுறவு சங்கத்தில் எழுத்தர்களாக பணியாற்றிய 3 பேர் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும் மல்லசமுத்திரம்பேரூராட்சி அதிமுக செயலாளருமான சுந்தரராஜன் திடீரென ராஜினா செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு உட்பட்ட தள்ளுபடி கடனுக்குத் தேர்வு செய்யப்பட்ட பீமரப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரால் அடகு வைக்கப்பட்ட 2 வளையல்கள் மாற்றுக் குறைந்த போலி நகை என்பது கடந்த வெள்ளிக்கிழமை இரவு தெரிய வந்தது. இதை அடுத்து, இது போல் 14 கணக்குகளில் குறைந்த அளவிலான தங்கம் உள்ள நகைகளுக்கு ரூபாய் 15 லட்சம் வரை பணம் கொடுத்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சட்டமன்றத்தில் எழுப்பிய புகார் எதிரொலியாக அடுத்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு சங்கங்களில் சோதனை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுக்குறைந்த தங்க நகைகளுக்குக் கூடுதல் பணம் கொடுத்ததாக கூறி கூட்டுறவு சங்கத்தில் எழுத்தர்களாக பணியாற்றி
வந்த சலோன்மணி, சிவலிங்கம் ,சுந்தரராஜ், என்ற 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் சங்கத்தின் தலைவரும் மல்லசமுத்திரம் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு குறைவாக நகை அடகு வைத்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த அரசு திட்டமிருந்ததை முன் கூட்டியே தெரிந்து கொண்டு வைத்துள்ளனர் அன்றைய ஆளும் கட்சியினர். அதன்படி அறிந்த சிலருக்கு குறைந்த தங்க நகைகளை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்த்தில் இது போல் நடந்திருப்பதாக தகவல் அறிந்த எம்எல்ஏ ஈஸ்வரன் இது குறித்து சட்டமன்றத்தில் பேசினார். இதனைத் தொடர்ந்து 14 கணக்குகளில் 22 காரட் எனப்படும் 916 நகைகளுக்கு பதிலாக பதினெட்டு கேரட் என சொல்லப்படும் 0. 75 எனப்படும் மாற்றுக் குறைந்த தங்களுக்கு கிராமுக்கு 3 ஆயிரம் ரூபாய் அளவு கடன் வழங்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக கடந்த 18ஆம் தேதி பாலகிருஷ்ணன் என்பவர் வங்கியினரால் மிரட்டப்பட்டதாகவும் அவரது மனைவி சுந்தராம்பாள் செய்தியாளர்களிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் துணைப்பதிவாளர் வெங்கடாசலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் எழுத்தர்களாக பணியாற்றி வந்த சலோன்மணி, சிவலிங்கம் ,சுந்தரராஜ், என்ற மூன்று பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ப்பட்டனர். இந்த நிலையில்
வங்கியின் தலைவராக இருந்த சுந்தரராஜன் திடீரென உடல்நலக்குறைவு எனக்கூறி ராஜினாமா செய்துள்ளார்.
இந்த14 கணக்குகளில் கூடுதலாக கொடுத்த ரூ 14 லட்சம் பணத்தைத் திருப்பி கட்டிவிட்டதாகவும் மீதி ஒரு லட்சம் இன்னும் கட்ட வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கடன் சங்கத்தில் பயிர்க் கடன் மோசடி நடந்திருப்பதாகவும் இதே போல் கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைக்கப் பட்டுள்ள நகைகளை கேரட் மீட்டர் கொண்டு ஆய்வு செய்தால் இதே போல் பலரின் முறைகேடுகள் வெளிப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment