இன்னும் ஒரே வாரம் தான்; திருப்பதியில் நிகழப் போகும் ஆச்சரியம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

இன்னும் ஒரே வாரம் தான்; திருப்பதியில் நிகழப் போகும் ஆச்சரியம்!

இன்னும் ஒரே வாரம் தான்; திருப்பதியில் நிகழப் போகும் ஆச்சரியம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். கொரோனா நெருக்கடியால் கடந்த ஆண்டு சில மாதங்கள் ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன.
பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து பக்தர்களுக்க ு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதும் குறைந்திருக்கிறது.
இதனால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து கொண்டிருக்கிறது. தினசரி 18 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை பக்தர்களின் வருகை காணப்படுகிறது. அதற்கேற்ப ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கையும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களின் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஏழுமலையான் மற்றும் திருமலை கோயில்களில் அணிவிக்கப்படும் நூற்றுக்கணக்கான மலர் மாலைகளைக் கொண்டு வாசனைத் திரவியங்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதையொட்டி வரும் 13ஆம் தேதி ஒய்.எஸ்.ஆர் தோட்டக்கலை பல்கலைக்கழகத்துடன் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad