ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசலா? - கடும் எதிர்ப்பை தெரிவித்த தமிழக அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 17, 2021

ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசலா? - கடும் எதிர்ப்பை தெரிவித்த தமிழக அரசு!

ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசலா? - கடும் எதிர்ப்பை தெரிவித்த தமிழக அரசு!

பெட்ரோல் மற்றும் டீசலை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 45வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக நிதி அெமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் கலந்து கொள்ள இயலாத நிலையில் அவரது உரை சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:ஏற்கனவே கலால் வரி, மேல் வரி விதிப்புகளில் செய்யப்பட்ட மாற்றத்தால் மத்திய அரசின் வருமானம் லட்சக் கணக்கான கோடிகள் அதிகரித்துள்ள நிலையில், மாநிலங்கள் பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்திக்கின்றன.

இந்த சூழலில் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது மாநிலங்களுக்கு மிகப்பெரிய வரி வருவாய் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பெரும் அநீதியாகவும் அமையும். எனினும் பெட்ரோல், டீசலுக்கான மேல் வரிகளை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யும் பட்சத்தில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த தங்கள் கருத்தை மறு பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம்.

தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டருக்கு மேற்பட்ட பாட்டிலுக்கு 5 சதவிகித வரியும், ஒரு லிட்டருக்கு கீழான பாட்டிலுக்கு 18 சதவிகித வரியும் விதிக்க அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையை ஏற்கக் கூடாது. இது தவிர ஜி.எஸ்.டி., நடைமுறைகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கொண்டு வருதல், ஒட்டுமொத்த வரி விதிப்பு நடைமுறைகளையும் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad