அரச குடும்பம் தரும் பணத்தை வேண்டாம் என்று கூறிய இளவரசி: எல்லாம் காதல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

அரச குடும்பம் தரும் பணத்தை வேண்டாம் என்று கூறிய இளவரசி: எல்லாம் காதல்!

அரச குடும்பம் தரும் பணத்தை வேண்டாம் என்று கூறிய இளவரசி: எல்லாம் காதல்!

பிரிட்டன் இளவரசர் ஹாரி சில நாட்களுக்கு முன்னர் தனது அரச குடும்பத்தை துறந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். அந்த வரிசையில், தற்போது ஜப்பான் அரச குடும்பத்து வாரிசு ஒருவரும் இணைந்துள்ளார். ஜப்பான் பேரசர் நருஹிட்டோ. இவரது தம்பின் மூத்த மகளும் மகோ (29) என்பவர்தான் காதலுக்காக அரச குடும்பத்தில் இருந்து விலக உள்ளார்.

இளவரசி மகோவும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கொமுரோவும் 2012ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்றபோது இவர்களுக்கு நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

ஜப்பான் அரசு குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால் அரச பட்டத்தை இழக்க நேரிடும். ஆனால், அதனை பொருட்படுத்தாது, காதலுக்காக அவர் அரச பட்டத்தை இழக்கவும் துணிந்தார். அதேசமயம், கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர்களது திருமணம் தள்ளிப் போனது.

தொடர்ந்து, இளவரசியின் காதலர் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து, அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதியுள்ளார். அதன்முடிவுகள் வந்தபின்னர் அவர் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இதனால், இளவரசி மகோவும் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார்.

இதனிடையே, மகோவின் தந்தையும் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், ஆனால் மகோ பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, இந்தாண்டு இறுதிக்குள் தங்களது திருமணத்தை அவர்கள் சாதாரண முறைப்படி நடத்தவுள்ளனர். திருமணத்துக்கு பின்னர் இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad