முட்டாள்தனமா யார் சொன்னது? ஜோ பைடன் பொளேர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

முட்டாள்தனமா யார் சொன்னது? ஜோ பைடன் பொளேர்!

முட்டாள்தனமா யார் சொன்னது? ஜோ பைடன் பொளேர்!

கடந்த பிப்ரவரி மாதம் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, ஆப்கனை கைபற்றியுள்ள தலிபான்கள், அங்கு புதிய அரசை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம், ஆப்கனில் இருந்து பலரும் வெளியேறினர். ஏற்கனவே சொன்னது போல ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் அமெரிக்க படைகள் அனைத்தும் ஆப்கனில் இருந்து வெளியேறி விட்டன. இதனை தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க தளவாடங்கள் பலவும் தலிபான்களிடம் சிக்கியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து திட்டமிட்டபடி வெளியேற்றத்தை நிகழ்த்திய எங்கள் தளபதிகளுக்கும் அவர்களின் கீழ் பணியாற்றும் வீரர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

அதேசமயம், கால்நடையாக ஆப்கன் நாட்டினர் பலரும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கனில் இருந்து வெளியேறிய அமெரிக்காவின் முடிவை பலரும் விமர்சித்து வருகின்றனர். போரிலிருந்து விலகும்போது இவ்வளவு மோசமாக கையாளப்பட்ட வரலாறு அமெரிக்காவில் இல்லை. பலவீனமான திரும்பப் பெறுதல் போன்ற முட்டாள்தனத்தை இதுவரை யாரும் நினைத்ததில்லை என்று முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜோ பைடனின் சொந்த கட்சியினர் சிலரும் கூட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மிகவும் நீண்ட ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்ததையே நிறைவேற்றி உள்ளாதாகவும், அமெரிக்காவின் நலனுக்கு பயன்படாத போரில் தொடர விருப்பவில்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad