கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட தமிழக அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட தமிழக அரசு!

கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட தமிழக அரசு!

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று, தமிழகத்தில் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை, அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

மேலும், பண்டிகைக் காலம் வருவதால், விழாக்களை எளிய முறையில், வீடுகளில் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்திய அவர், அவசியத் தேவைக்கு மட்டும் பொது போக்குவரத்தை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் கட்டாயம கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் இன்று, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளதாவது:
மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடுவதை திட்டமிட்டு துரிதப்படுத்த வேண்டும். நாளை மறுநாள் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், அதிகம் பேர் பயன் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தொற்று கண்டறியப்படும் நபருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் உடனடியாகக் கண்டறிந்து பரிசோதனையை வேகப்படுத்த வேண்டும்.

அதே போல 12 ஆம் தேதி மெகா முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad