மெகா கொரோனா தடுப்பூசி - 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 24, 2021

மெகா கொரோனா தடுப்பூசி - 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி

மெகா கொரோனா தடுப்பூசி - 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி

6வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 6 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தறது. சென்னையில் 200 வார்டுகளில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டறது. 6வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 
இதில் முதல் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 67,573 பேருக்கும், 2 ஆம் தவணை தடுப்பூசி 13,65,646 பேருக்கும் போடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமையொட்டி இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. 

No comments:

Post a Comment

Post Top Ad