டயாபடீஸால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கிறதா நெல்லிக்காய்...? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 11, 2021

டயாபடீஸால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கிறதா நெல்லிக்காய்...?

டயாபடீஸால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கிறதா நெல்லிக்காய்...?

நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் 'சி' செறிந்து இருப்பதால், டயாபடீஸ் மட்டுமில்லாமல், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதயத்தை காக்க, மூட்டுவலி குறைய, கண்களை பாதுகாக்க, மொத்தத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

நெல்லிக்காயின் அபரிமிதமாக அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் சி) மற்ற செயற்கை விட்டமின் சி யை விட சுலபமாக, சீக்கிரமாக உடலில் ஏற்றுக்கொள்ளப்படும். 10 கிராம் நெல்லிக்காயின் 600 - 900 மி.கி. விட்டமின் சி உள்ளது. நெல்லி டயாபடீஸால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கிறது. 
 
கணையத்தை தூண்டி, இன்சுலின் சுரக்க உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியமான மருந்து. மூன்றே நாளில் ரத்தத்திலுள்ள கிருமிகளை கொல்லும் செல்களை இரண்டு மடங்காக்கும். கொலஸ்ட்ராலை குறைப்பதால் இதயத்திற்கு நல்லது. நெல்லிக்கனியின் விதையும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து நெல்லி முதுமையை தடுக்கும் டானிக் நெல்லி காயை வேகவைத்தாலும், வதக்கினாலும், உலரவைத்தாலும், ஊறுகாயாக போட்டாலும் அதிலிலுள்ள விட்டமின் 'சி' அழிவதில்லை.
 
நெல்லிக்காய் சாற்றை ஒரு மேஜைக் கரண்டி எடுத்து, ஒரு கப் பாகற்காய் சாற்றுடன் 2 மாதம் குடித்து வர சர்க்கரை வியாதி கட்டுப்படும். இந்த வியாதியினால் வரும் கண் கோளாறுகள் தடுக்கப்படும். நெல்லிக்காய் பொடி, நாவல் பழம், பாகற்காய் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து சாப்பிட, நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 
நெல்லிக்காய் சாற்றுடன் மஞ்சள் பொடி சேர்த்து உட்கொள்வது சர்க்கரை வியாதிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் எளிமையான மருந்து அளவுகள் 15 மி.லி. நெல்லிக்காய்ச் சாறு, அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடி. நெல்லியின் விதைகளின் பொடியின் கஷாயம், சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் நெல்லிக்காயை துவையல் செய்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad