வாடிகனில் பிரதமர் மோடிக்கு போப் கொடுத்த ஸ்பெஷல் பரிசு இதுதான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 30, 2021

வாடிகனில் பிரதமர் மோடிக்கு போப் கொடுத்த ஸ்பெஷல் பரிசு இதுதான்!

வாடிகனில் பிரதமர் மோடிக்கு போப் கொடுத்த ஸ்பெஷல் பரிசு இதுதான்!



முதல்முறை போப் பிரான்சிஸ் அவர்களை சந்தித்து பிரதமர் மோடி சிறப்பு பரிசை வழங்கிய நிலையில், அவருக்கும் பரிசு கிடைத்துள்ளது.
இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு ஜி-20 மற்றும் கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடுகளில் பங்கேற்கிறார். இந்த சூழலில் கிறிஸ்தவர்களின் புனித நகரமான வாடிகனுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் சென்றனர். போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களை மோடி சந்திக்கையில், இருவரும் கட்டித் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.போப்பாண்டவர் - பிரதமர் மோடி சந்திப்பு

இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடக்கும் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. அதில், பருவநிலை மாறுபாடு, கொரோனா பரவல், பயங்கரவாத ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, அமைதி மற்றும் சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவிற்கு போப்பாண்டவர் வருகை புரிய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
பரிமாறிக் கொள்ளப்பட்ட பரிசுகள்

இந்த சந்திப்பின் நினைவாக இருவரும் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொண்டனர். வெள்ளியால் செய்யப்பட்ட பிரத்யேக மெழுகுவர்த்தி ஸ்டேண்டை போப்பாண்டவருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். மேலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், யுக்திகள், இலக்குகள் குறித்து விவரிக்கும் புத்தகம் ஒன்றையும் வழங்கினார். இதையடுத்து 2019ல் அபுதாபியில் போப்பாண்டவர் - அல் அசார்கிராண்ட் இமாம்
தேனியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஓபிஎஸ்!

இருவரும் கையெழுத்திட்ட சகோதரத்துவ நல்லிணக்க ஒப்பந்தத்தின் வெண்கல நினைவுத் தகட்டை மோடிக்கு போப்பாண்டவர் பரிசாக அளித்தார். இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் அடுத்த ஆண்டு ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளன. இந்த சூழலில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருவதாக ஒருசாரார் கூறுகின்றனர்.
அதேசமயம் அடுத்த பல ஆண்டுகளுக்கு பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற முடியாது என்றும் மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். விரைவில் கோவா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே அவர்களின் வாக்கு வங்கியை குறிவைக்கும் வகையில் தான் போப்பாண்டவர் உடன் பிரதமர் மோடி சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad