எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 19, 2021

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை நடந்த நிலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஜூலை மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளிவந்தது

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்த நிலையில் தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை ஏற்று எம் ஆர் விஜயபாஸ்கர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

Post Top Ad