தடுப்பூசி போட்டிருந்தா மட்டும்தான் சரக்கு..! – அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 11, 2021

தடுப்பூசி போட்டிருந்தா மட்டும்தான் சரக்கு..! – அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!

தடுப்பூசி போட்டிருந்தா மட்டும்தான் சரக்கு..! – அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளில் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே மதுபானம் என அறிவிக்கப்பட்டுள்ளது மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 வாரங்களாக தமிழகம் முழுவதும் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு அப்பகுதி மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி , 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என மதுக்கடைகளில் பலகை தொங்கவிடப்பட்டுள்ளதாம். இதனால் அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad