மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எப்படி சேர்வது
\இந்தியாவில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்கலாம்.
2015-2016ம் ஆண்டில் 65,78,459 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் ரூ.6,901.99 கோடி சேமிப்பு செலுத்தப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் 40,18,344 பயனாளிகள் மூலம் இந்த திட்டத்தில் ரூ.8,328.59 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது.
குறைந்தபட்சம் ரூ.250, அதிகபட்சம் ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 வரை சேமிக்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழான மொத்த சேமிப்பு 310 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 2.45 கோடி பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். சேமிப்பு தொகையை குழந்தையின் உயர்கல்வி மற்றும் திருமணத்திற்கு வேண்டி எடுக்கலாம்.
அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்.
பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு கணக்கு தொடங்கும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பெண் குழந்தையின் Birth Certificate சமர்ப்பிக்க வேண்டும்.
பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலையில், Aadhar Card, PAN Card மற்றும் Passport போன்றவற்றை வயது சான்று ஆவணமாக அளிக்கலாம்.
தொகை செலுத்துபவர் அடையாளம், குடியிருப்பு ஆதாரம் மற்றும் முக்கிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க
வேண்டும்.
No comments:
Post a Comment