நகை ஏலத்தில் முறைகேடு... கூட்டுறவு சங்க அதிமுக பிரமுகரின் வேலைக்கு ஆப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

நகை ஏலத்தில் முறைகேடு... கூட்டுறவு சங்க அதிமுக பிரமுகரின் வேலைக்கு ஆப்பு!

நகை ஏலத்தில் முறைகேடு... கூட்டுறவு சங்க அதிமுக பிரமுகரின் வேலைக்கு ஆப்பு!



நகையை ஏலம் விடுவதில் முறைகேடு செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் 25.5 கிராம் நகையை வைத்து. கடன் பெற்றுள்ளார்.காலக்கெடு முடிந்தும் நகையை மீட்க இசக்கிமுத்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் நகை ஏலத்துக்கு சென்றது. அயன்சிங்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பூதப்பாண்டி, கூட்டுறவு சங்க செயலாளர் சுந்தரி ஆகியோர் அந்த நகையை முறைப்படி ஏலம் விடாமல், பதுக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இசக்கிமுத்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். நெல்லை கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் முத்துசாமி. இதுகுறித்து விசாரணை நடத்தி, நகையை ஏலம் விடாமல் மறைத்ததை கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பித்தார்.இதையடுத்து நெல்லை கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அழகிரி. சங்கத்தின் தலைவரான பூதப்பாண்டியை 6 மாதத்திற்கும், செயலாளர் சுந்தரியை 3 மாத காலத்திற்கும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அயன்சிங்கம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad