இது யாருடைய இந்தியா? கமல்ஹாசன் கேள்வி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 1, 2021

இது யாருடைய இந்தியா? கமல்ஹாசன் கேள்வி!

இது யாருடைய இந்தியா? கமல்ஹாசன் கேள்வி!




இது யாருடைய இந்தியா என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்
கொரோனா வைரஸ் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது. மாதக் கணக்கில் அமலில் இருந்த பொது முடக்கத்தால் பொது மக்களின் பொருளாதாரம், வாழ்வாதரம் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் முடக்கப்பட்டதால் நாடு முழுவதும் எழைகளும், நடுத்தர வர்க்க மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நெருக்கடியில் இருக்கிறார்கள்.சாமானிய மக்களின் வாழ்க்கையில் பெருந்துயரத்தை இந்த கொரோனா வைரஸ் தொற்று, ஏற்படுத்தியிருந்தாலும், இந்திய பணக்காரர்களுக்கு அது சாதகமாகவே அமைந்துள்ளது. இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்த கொரோனா கால கட்டத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவித்தது. அம்பானி முதல் அதானி வரை இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கொரோனா லாக்டவுன் காலத்தில் மட்டும் சுமார் 35 சதவீதம் உயர்ந்துள்ளதா அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.
இந்த நிலையில், ஐஐஎஃப்எல் நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது. கவுதம் அதானி குடும்பம்ரூ.5.05 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2ஆம் இடம் பிடித்துள்ளது. நாளொன்றுக்கு ரூ.1,000 கோடிஅளவில் அளவில் அவருடைய குடும்பம் வருமானம் ஈட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டில் ரூ.1.40 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் அதானி இருந்தார். தற்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.5.05 லட்சம் கோடியாக உயர்ந்து 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த நிலையில், இதனை சுட்டிக்காட்டி, இது யாருடைய இந்தியா என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 32 மில்லியன் இந்தியர்கள், நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?” என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad