தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி செம பிளான்... களத்தில் இறங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை!
தர்மபுரியில் கொரோனா பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களுக்கு பயனளிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு அரசு மாநிலம் ழுழுவதும் 4ஆவது கட்டமாக 25 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக மாபெரும் மருத்துவ முகாமினை நடத்த உத்தரவிட்டிருந்தது.
அதன்படி பாலக்கோடு பேரூராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் 18 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், தக்காளி மார்க்கெட், மைதீன்நகர், அரசு மகப் பேறு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு காலை முதலே 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகாமினை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது தடுப்பூசி செலுத்தியவர்களிடம் தங்கள் வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்.
அதேபோல் அடுத்த கட்டமாக ஒவ்வொரு வார்டு வாரியாக முகாம் அமைத்து அதிகபடியான தடுப்பூசிகள் செலுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவர் சிவகுரு, தாசில்தார் அசோக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment