கோவையில் வாகனங்களை விபத்தில் சிக்க வைக்கும் ஆடு, மாடுகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
சாலையில் திரியும் ஆடு மாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன என்றும் இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் மக்கள் புகார் கூறுகின்றனர்.கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் புளிய மரத்தின் கீழே குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி, தொட்டி நிறைந்தும் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.
துர்நாற்றம் அடித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பை கழிவுகளை தின்பதற்காக கூட்டம் கூட்டமாக ஆடுகள் மற்றும் மாடுகள் குப்பைத் தொட்டியை சுற்றி திரிகின்றன.இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அப்பகுதியை கடக்க முடியாத நிலை உள்ளது. இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறிக் கீழே விழும் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்கின்றன.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் புகார் தெரிவித்தும் ஆடுமாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் சாலையிலே சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் கால் நடை உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன், அவற்றை வளர்ப்பு கொட்டகையில் கட்டி வைத்து வளர்க்க அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆடு, மாடு போன்ற விலங்குகள் வாகனத்தின் குறுக்கே வந்தால் அது எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தும் என நாம் அறிந்ததுதான். அப்படியிருந்தும் மாநகராட்சி அதிகாரிகள் அலெட்சியத்தோடு செயல்பட்ட சம்பவம் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment