உள்ளாட்சி தேர்தலில் பலே.. முறைகேடு; மக்கள் பார்ப்பதாக ஜி.கே.வாசன் புகார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

உள்ளாட்சி தேர்தலில் பலே.. முறைகேடு; மக்கள் பார்ப்பதாக ஜி.கே.வாசன் புகார்!

உள்ளாட்சி தேர்தலில் பலே.. முறைகேடு; மக்கள் பார்ப்பதாக ஜி.கே.வாசன் புகார்!



தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்தே முறைகேடுகள் ஆரம்பித்துவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ம.பொ.சி 26வது நினைவு நாளை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த திருவுருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம் மற்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன் பிறகு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்சநீதிமன்ற கிளை சென்னைக்கு வரவுள்ளது. சமானியனுக்கும் எளிய முறையில் நீதி கிடைக்க ஏதுவாக இருக்கும். இதனை வரவேற்கிறோம். மத்திய, மாநில அரசிற்கு இடையே நடத்தப்படும் கூட்டங்களில் மாநில அரசுகள் பங்கேற்பது அவசியம். அந்த வகையில் ஜி.எஸ்.டி கூட்டத்தில் மாநில அரசு பங்கேற்பது அவசியம். மக்கள் அரசை கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் கோட்பாடுகளுக்கு உட்பட்டு முறையாக நடைபெற வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்தது முதலே பல இடங்களில் பிரச்சனைகளும், முறைகேடுகளும் நீடித்து வருகிறது.தமிழக தேர்தல் ஆணையம் கவனித்து தேர்தலை முறையாக நடத்த வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். அதேபோல் ம.பொ.சிக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் கோரிக்கை வைத்தார்.
பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறியதாவது:

ம.பொ.சி தமிழ், இலக்கியம் என தடம் பதிக்காத துறையே இல்லை. சுதந்திர போராட்ட வீரர்களுக்கான வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோருக்கு கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவைகள் எழுதி தமிழ் சினிமாவில் அடையாளம் பதிக்க காரணமாக இருந்தவர். அவரது மகன் மபொசி செந்தில் தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. இவ்வாறு கரு.நாகராஜன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad