ட்விட்டர் கணக்கு மீண்டும் வேண்டும் - நீதிமன்றத்தை நாடிய டொனால்டு ட்ரம்ப்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

ட்விட்டர் கணக்கு மீண்டும் வேண்டும் - நீதிமன்றத்தை நாடிய டொனால்டு ட்ரம்ப்!

ட்விட்டர் கணக்கு மீண்டும் வேண்டும் - நீதிமன்றத்தை நாடிய டொனால்டு ட்ரம்ப்!



முடக்கப்பட்ட தனது ட்விட்டர் கணக்கை மீட்டுத் தரக் கோரி நீதிமன்றத்தில் டொனால்டு ட்ரம்ப் முறையீடு செய்துள்ளார்
முடக்கப்பட்ட தனது ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்க, ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மனு தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், கடந்த அதிபர் தேர்தலுக்கு முன்பு, வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி, அவரது ட்விட்டர் கணக்கை, ட்விட்டர் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நிரந்தரமாக முடக்கியது.இதைத் தொடர்ந்து டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன. டொனால்டு ட்ரம்ப் பதிவுகள் மேலும் வன்முறையை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளதாகக் கூறி ட்விட்டர் காரணம் தெரிவித்தது. ட்ரம்பிற்கு சுமார் 89 மில்லியன் பாலோயர்ஸ் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், முடக்கப்பட்ட தனது ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்க, ட்விட்டர் நிறுவனத்தை கட்டாயப்படுத்துமாறு அமெரிக்க நீதிமன்றத்தில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்பின் உரிமைகள் மீறப்பட்டதாக, ட்ரம்ப் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதற்கு கருத்து தெரிவிக்க ட்விட்டர் நிறுவனம் மறுத்து விட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad