இலங்கைக்கு இந்தியன் ரயில்வே கொடுக்கும் சர்ப்ரைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

இலங்கைக்கு இந்தியன் ரயில்வே கொடுக்கும் சர்ப்ரைஸ்!

இலங்கைக்கு இந்தியன் ரயில்வே கொடுக்கும் சர்ப்ரைஸ்!



இலங்கையின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் தேவையான ரயில் பெட்டிகள் தயாரிப்பை இந்திய ரயில்வே விரைவுபடுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே சார்பில் ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் 160 பயணிகள் பெட்டிகளை வழங்க 82.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் இலங்கை அரசும், இந்திய ரயில்வேயும் ஒப்பந்தம் போட்டுள்ளன. இதில் 60 பெட்டிகள் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான போக்குவரத்து வசதிகளை RITES எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை பிரிவு வழங்கி வருகிறது.
எளிதில் மாற்றக்கூடிய வசதிகள்

அந்த வரிசையில் மேலும் 20 பெட்டிகள் கடந்த 17ஆம் தேதி அனுப்பப்பட்டன. இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெட்டிகள் பயணிகளுக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தங்களது தேவைகளை ஏற்கனவே இலங்கை ரயில்வே நிர்வாகம் விரிவான விவரங்களுடன் ஆவணங்களை அளித்துள்ளது.காத்திருக்கும் இந்திய ரயில்வே

அதன்படி, சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டன. அடுத்தகட்டமாக இரண்டு ஏசி DMU-க்களை உருவாக்கி PSU-RITES மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் ஏசி DMU ஆனது மொத்தம் 13 பெட்டிகளுடன் இலங்கைக்கு செல்ல தயார் நிலையில் இருக்கிறது. இலங்கை ரயில்வே நிர்வாகத்திடம் சில தகவல்களைப் பெற இந்திய ரயில்வே காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.அந்த‌ ரகசியத்த நீங்க உதயநிதி ஸ்டாலின் கிட்ட தான் கேக்கனும் - திருமாவளவன்
அடுத்தகட்ட ரயில் திட்டங்கள்

முன்னதாக இலங்கை ரயில்வேக்கு 6 DMU-க்கள் (அக்டோபர் 2019ல் ஒப்பந்தம் நிறைவு), 10 டீசல் லோகோமோடிவ்ஸ் (ஜூன் 2020ல் ஒப்பந்தம் நிறைவு) உள்ளிட்டவற்றை RITES அனுப்பி வைத்துள்ளது. இலங்கையில் கொரோனா பாதிப்பால் ரயில்வே துறை பெரிதும் முடங்கியிருந்தது. தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி கொண்டிருப்பதால் தங்களது திட்டங்களை செயல்படுத்த இலங்கை அரசு தொடங்கியுள்ளது.அந்த வகையில் மாஹோவில் இருந்து ஓமந்தை வரையிலான 128 கிலோமீட்டர் தூர ரயில் பாதையை மேம்படுத்துதல், மாஹோவில் இருந்து அனுராதபுரா வரை சிக்னலிங் திட்டத்தை செயல்படுத்துதல், போல்கஹவேலா முதல் குருனேகலா வரை டபுள் ட்ராக்கிங் ரயில் லைன் ஆகிய திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad