பேருந்து சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு; வெளியான அரசின் புதிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

பேருந்து சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு; வெளியான அரசின் புதிய அறிவிப்பு!

பேருந்து சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு; வெளியான அரசின் புதிய அறிவிப்பு!




மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் தொடரும் என்று இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி கடந்த ஒன்றை மாதங்களாக அமலில் இருந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 4 மணி முதல் நாடு முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து சுகாதார சேவைகள் பிரிவின் மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

அதன்படி, தொழில், மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய பொருள் வாங்குவதற்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. உள்ளூர், வெளியூர் விருந்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது. பதிவுத் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். வரும் 16ஆம் தேதிக்கு பின் 50 நபர்களுக்கு உட்பட்டு மண்டபங்களில் திருமணங்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளை திறக்கலாம்

இறுதிச் சடங்குகளில் அதிகபட்சமாக 10 பேருக்கு மட்டுமே அனுமதி. வழிபாட்டு தலங்கள், கூட்டு வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமலில் இருக்கும். பொதுப் போக்குவரத்தில் இருக்கையின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டும் பயணிகளை ஏற்றப்பட வேண்டும். பள்ளிகளை 50 சதவீத மாணவர்களுடன் நடத்தலாம்.இது ஸ்டாலின் ரெய்டு; இந்த டுவிஸ்ட்ட எதிர்பார்க்கல இல்ல!
பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா திரையரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் ஆகியவற்றுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. அலுவலகம் வந்து பணிபுரிய குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் அனுமதிக்க வேண்டும். அதேசமயம் வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகள் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கை ராணுவத் தளபதியும், கோவிட்-19 செயல்பாட்டுக் குழுத் தலைவருமான சவேந்திர சில்வா கூறுகையில், நடப்பு அக்டோபர் மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய மாதம். எனவே சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad