நார்வேயில் வில், அம்புடன் தோன்றிய ஆசாமி! பலரை கொன்றதால் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, October 14, 2021

நார்வேயில் வில், அம்புடன் தோன்றிய ஆசாமி! பலரை கொன்றதால் பரபரப்பு!

நார்வேயில் வில், அம்புடன் தோன்றிய ஆசாமி! பலரை கொன்றதால் பரபரப்பு!

நார்வேயில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி ஒன்றில் திடீரென வில், அம்புடன் புகுந்த ஆசாமி பலரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நார்வே தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது காங்ஸ்பெர்க் நகர். இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் திடீரென ஆசாமி ஒருவன் வில், அம்புடன் தோன்றியுள்ளான். மக்கள் சுதாரிப்பதற்கு முன்னரே பலர் மீது அவன் அம்புகளை எய்துள்ளான். மேலும் தான் வைத்திருந்த துப்பாக்கியாலும் தாக்குதல் நடத்தியுள்ளான்.

இதனால் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொலைகாரனை பிடித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நார்வேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad