இந்து தேசம் வேணும்.. இன்னிக்கே ஜல சமாதி.. அடம்பிடிக்கும் சாமியார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

இந்து தேசம் வேணும்.. இன்னிக்கே ஜல சமாதி.. அடம்பிடிக்கும் சாமியார்!

இந்து தேசம் வேணும்.. இன்னிக்கே ஜல சமாதி.. அடம்பிடிக்கும் சாமியார்!


இன்று ஜல சமாதி அடையப்போவதாக மிரட்டிய சாமியாரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து தேசம் என அறிவிக்க வேண்டுமெனவும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ய வேண்டுமெனவும் மத்திய அரசிடம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா மகாராஜ் என்ற சாமியார் வலியுறுத்தினார்.
இந்தியாவை இந்து தேசம் என அக்டோபர் 2ஆம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைவேன் என ஆச்சார்யா மகாராஜ் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், இன்று அக்டோபர் 2ஆம் தேதி என்பதால், அயோத்தியில் சரயு நதியில் ஜல சமாதி அடைவதற்கான ஏற்பாடுகளை ஆச்சார்யா மகாராஜ் மேற்கொண்டார்.

ஜல சமாதி என்பது ஒரு மனிதர் தன்னை தண்ணீருக்குள் மூழ்கி உயிரை விடுவது ஆகும். ஆச்சார்யா மகாராஜ் ஜல சமாதிக்கு தயாராவதை தடுக்க அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். காவல்துறையினர் அவர் வீட்டில் சூழ்ந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.ஆச்சார்யா மகாராஜ் தனது கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் அவரை சமாதானம் செய்ய முயற்சித்து வருகின்றனர். இதேபோல சில மாதங்களுக்கு முன்பும், இதே கோரிக்கயை முன்வைத்து தீக்குளிக்கப்போவதாக அவர் மிரட்டினார். அப்போதும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இதுமட்டுமல்லாமல், சாகும் வரை உண்ணாவிரதம் என அறிவித்து 15 நாட்களுக்கு பிடிவாதமாக இருந்தார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு உறுதியளித்ததால் விரதத்தை முடித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad