அடங்காத கொரோனா தொற்று; இந்தியாவிற்கே ஆட்டம் காட்டும் மாநிலங்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

அடங்காத கொரோனா தொற்று; இந்தியாவிற்கே ஆட்டம் காட்டும் மாநிலங்கள்!

அடங்காத கொரோனா தொற்று; இந்தியாவிற்கே ஆட்டம் காட்டும் மாநிலங்கள்!


இரண்டு மாநிலங்களில் கொரோனா பாசிடிவ் விகிதம் உச்சத்தில் இருப்பது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால் கேரளாவில் கொரோனா பாசிடிவ் விகிதம் உச்சத்தில் இருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இங்கு 14 நாட்கள் கால இடைவெளியில் நடத்தப்பட்ட 100 பரிசோதனைகளில் கிடைத்த பாசிடிவ் விகிதமானது 16 சதவீதமாக காணப்படுகிறது. கேரளாவிற்கே ஷாக் கொடுக்கும் வகையில் மிசோரம் மாநிலத்தில் பாசிடிவ் விகிதம் 17 சதவீதமாக உள்ளது. இதையடுத்து சிக்கிம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இவை 5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை பாசிடிவ் விகிதத்தை கொண்டிருக்கின்றன.

தேசிய அளவில் பார்க்கும் போது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது. எனவே மேற்குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களிலும் தீவிர நோய்க் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய தேவையிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேசமயம் கொரோனா உயிரிழப்புகள் கடந்த ஏப்ரல் - மே மாதங்களை ஒப்பிடுகையில் தற்போது பெரிதும் குறைந்துள்ளன. மேலும் நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்கள் கொண்ட மாநிலங்களான ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், கோவா ஆகியவை தொடர்ச்சியான கட்டுப்பாடுகளால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

தொடர்ந்து முதலிடத்தில் கேரளா

இங்கு 2 சதவீதத்திற்கும் கீழ் மட்டுமே கொரோனா பாசிடிவ் விகிதம் உள்ளது. பிகார், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாசிடிவ் விகிதம் 0.006 சதவீதமாக குறைந்திருக்கிறது. கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் கேரளா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு 1.4 லட்சம் பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று கொண்டிருக்கின்றனர்.
பண்டிகை கால எச்சரிக்கை

அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு (17,200), மிசோரம் (16,015), கர்நாடகா (12,500), ஆந்திரப் பிரதேசம் (11,700) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. அதிக மக்கள் அடர்த்தி கொண்ட, போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாத மாநிலங்களான பிகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றில் தினசரி தொற்று பெரிதும் குறைந்துள்ளது.
தலைநகர் டெல்லியிலும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது பொதுமக்கள் மற்றும் அரசு மத்தியில் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. எனவே அடுத்து வரும் பண்டிகை காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தீபாவளி வரை உரிய வழிகாட்டுதல்களை தீவிரமாக பின்பற்றினால் அதன்பிறகு மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நம்பிக்கை அளிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad