புதுச்சேரி -கடலூர் ரயில் பாதை திட்டம் எப்போ? - உயரதிகாரி சொன்ன முக்கிய தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

புதுச்சேரி -கடலூர் ரயில் பாதை திட்டம் எப்போ? - உயரதிகாரி சொன்ன முக்கிய தகவல்!

புதுச்சேரி -கடலூர் ரயில் பாதை திட்டம் எப்போ? - உயரதிகாரி சொன்ன முக்கிய தகவல்!


புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு கூடுதலாக என்னென்ன வசதிகள் செய்து தரமுடியும் என்று ஆய்வு செய்ததாக திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் மனீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் மனீஷ் அகர்வால் இன்று சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.அப்போது ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நடைமேடைகள், டிக்கெட் கொடுக்கும் இடம், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் பரிசோதகர் அறை, நீட்டிக்கப்பட உள்ள சர்வீஸ் லைன் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அவர் பார்வையிட்டார். அப்போது ரயில் நிலைய கண்காணிப்பாளர் தங்கராசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து அவர் கூறும்போது, 'புதுச்சேரி ரயில் நிலையம் முக்கியமான ஒரு ரயில் நிலையமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாக புதுச்சேரி உள்ளது.
இதனால் இங்கு என்னென்ன வசதிகள் உள்ளன, மேலும் என்னென்ன வசதிகளை ஏற்படுத்தி தரலாம் என்று ஆய்வு மேற்கொண்டார். ஏற்கெனவே இங்கு பல வசதிகள் உள்ளன. இருப்பினும் கூடுதலாக சில வசதிகள் செய்து கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய திட்டங்கள் ஏதும் தற்போது இல்லை. புதுச்சேரி-கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. காரைக்கால் – பேரளம் ரயில் பாதை அமைக்கும் திட்ட பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதுதொடர்பாக மாநில அரசுடன் பேசி வருகிறோம்' என்று அகர்வால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad