நிதின் கட்கரியை புகழ்ந்து தள்ளிய சரத் பவார்! - காரணம் என்ன?
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பாராட்டி உள்ளார்
மக்கள் பிரதிநிதிகள், நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பணியாற்றலாம் என்பதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிறந்த உதாரணமாக திகழ்கிறார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பாராட்டுத் தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் அஹமத் நகரில், பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். இதில், மஹாராஷ்டிர மாநில அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் கலந்து கொண்டனர்.அசுத்தமான பஸ் ஸ்டாப்; ஒரு மணி நேரத்தில் சுத்தமானது!
விழாவில் சரத் பவார் பேசியதாவது:
அஹமத் நகரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள திட்டங்களை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைக்க உள்ளதால், இந்த விழாவில் பங்கேற்றேன். நான் பங்கேற்பதை அவரும் விரும்பினார். அடிக்கல் நாட்டிய பிறகு எந்த திட்டங்களும் தொடங்குவது அரிதாக தான் நடக்கும். ஆனால், நிதின் கட்கரி அமைச்சகத்தின் திட்டங்கள் எனில், விழா முடிந்த சில நாட்களில் பணிகள் துவங்கி விடும்.
மக்கள் பிரதிநிதிகள், நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பணியாற்றலாம் என்பதற்கு நிதின் கட்கரி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக கட்கரி பதவி ஏற்பதற்கு முன்னர் 5 ஆயிரம் கி.மீ., அளவுக்கு தான் பணிகள் நடந்தது. ஆனால், அவர் பதவி ஏற்றதும் 12 ஆயிரம் கி.மீ., அளவுக்கு பணிகள் நடந்துள்ளது.
No comments:
Post a Comment