சீமான் எடுத்த திடீர் முடிவு; உள்ளாட்சி தேர்தல் படுத்தும் பாடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

சீமான் எடுத்த திடீர் முடிவு; உள்ளாட்சி தேர்தல் படுத்தும் பாடு!

சீமான் எடுத்த திடீர் முடிவு; உள்ளாட்சி தேர்தல் படுத்தும் பாடு!


தமிழகத்தில் எனது தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சிக்கு யாரும் ஓட்டு போட வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஒருவேளை தனக்கு யாராவது ஓட்டுப் போட யாரேனும் விரும்பினால் அவர்கள் யாரும் ஜாதியை பார்த்து வாக்களிக்க வேண்டாம் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
ருத்ரதாண்டவம் படம்; நடுரோட்டில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு அட்டகாசம்!
நெல்லை மாவட்டத்தில் வருகின்ற 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் பரப்புரை நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன.

இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் பரபரப்பான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் தொகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து தேர்தல் பரப்புரை ஆற்றினார்.அப்போது சீமான் பேசியதாவது: ஜாதியை பார்த்து எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். நான் தமிழர் என்று நினைத்து வாக்களித்தால் போதும். தமிழனுக்கு எந்த பெருமையும், அடையாளமும் இருக்க கூடாது என திராவிட கட்சியினர் நினைக்கின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 2016ல் 1.1 விழுக்காடும், 2019 பாராளுமன்ற தேர்தலில் 4.5 விழுக்காடும், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 7 விழுக்காடும் பெற்றுள்ளோம்.ஒற்றுமையாக இருந்து வாக்களித்து இருந்தால் 10 விழுக்காடு பெற்றிருக்கலாம். தொடர்ச்சியாக தோற்கடித்தவர்கள் நம்மை தோளில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அந்த காலம் விரைவில் வரும். இவ்வாறு சீமான் உரையாற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad