அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா சசிக்கலா? – ஓபிஎஸ் பேட்டியால் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 25, 2021

அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா சசிக்கலா? – ஓபிஎஸ் பேட்டியால் பரபரப்பு!

அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா சசிக்கலா? – ஓபிஎஸ் பேட்டியால் பரபரப்பு!

சசிக்கலா தன்னை அதிமுக பொதுசெயலாளர் என கூறிக்கொள்ளும் நிலையில் அவரை கட்சியில் இணைப்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான பின் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த நிலையில், அடிக்கடி அதிமுக தொண்டர்களோடு செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் என சசிக்கலா பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சசிக்கலா மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது மதுரையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார். சசிக்கலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என எடப்பாடியார் பேசி வரும் நிலையில் ஓ.பி.எஸ்ஸின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad