காலவரையின்றி பெய்ஜிங் மாரத்தான் ஒத்திவைப்பு
சீனாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், பெய்ஜிங் மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
30,000 பேர் வரை பங்கேற்கவிருந்த மாரத்தான் அக்டோபர் 31ஆம் தேதி நடக்கவிருந்தது. சீனாவின் 11 மாகாணங்களில் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தரப்பு
கூறியுள்ளது. அவர்கள் அனைவருமே டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நான்ஜிங் கொரோனா பரவலுக்குப் பிறகு இது தான் மிகப் பெரிய பரவலாக கருதப்படுகிறது.
கடந்த 1981ஆம் ஆண்டு முதல் பெய்ஜிங் மாரத்தான் நடத்தப்பட்டு வருகிறது. இது சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாரத்தான் பாரம்பரியமாக தியானென்மென் சதுக்கத்தில் தொடங்கி, பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவிலுள்ள கொண்டாட சதுக்கத்தில் நிறைவடையும்.
No comments:
Post a Comment