தமிழ்நாடு தினம் அறிவிப்பில் உடன்பாடு இல்லை: திருமாவளவனின் சர்ச்சை டுவிட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 31, 2021

தமிழ்நாடு தினம் அறிவிப்பில் உடன்பாடு இல்லை: திருமாவளவனின் சர்ச்சை டுவிட்!

தமிழ்நாடு தினம் அறிவிப்பில் உடன்பாடு இல்லை: திருமாவளவனின் சர்ச்சை டுவிட்!

இதுவரை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு தினம் என கொண்டாடப்பட்டு வந்த நிலையில் திடீரென சமீபத்தில் ஜூலை 18ஆம் தேதி தான் தமிழ்நாடு தினம் என அறிவிப்பு வெளியானது
இது குறித்த அரசாணையை விரைவில் வெளியாகும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணா அவர்கள் சட்டப்பேரவையில் தமிழ்நாடு என அறிவித்த ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினம் என கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்

அவரது இந்த அறிவிப்பை கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட தாகவே கருதப்பட்டன. இந்த நிலையில் திடீரென திருமாவளவன் தனது டுவிட்டரில் தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சித் தலைவர்கள், எல்லைமீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்துக் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. மாண்புமிகு முதல்வருக்கு @mkstalin
எமது வேண்டுகோளாக முன்வைக்கிறோம் என பதிவு செய்துள்ளார்.

இந்த டுவிட்டில் இருந்து திருமாவளவனுக்கு ஜூலை 18 தமிழ்நாடு தினம் என்பதில் உடன்பாடு இல்லை என்ற கருத்து ஏற்பட்டுள்ளதா? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad