பள்ளிகள் திறப்பில் புதிய அறிவிப்பு; இரண்டு வாரங்களில் அதிரடி ஏற்பாடு!.
ஊரடங்கு நீக்கப்பட்டதை அடுத்து முதல்கட்டமாக 200 மாணவர்கள் வரை கற்கும் பள்ளிகளை இருவாரங்களுக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. முன்னதாக தினசரி தொற்று கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி 10 ஆயிரத்தை நெருங்கியது. இதையடுத்து தொடர்ச்சியான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நிலைமை கட்டுக்குள் வரத் தொடங்கியது. தற்போது 1,400க்கும் கீழ் பாதிப்புகள் சரிந்துள்ளன. நேற்றைய தினம் புதிதாக 1,398 பேருக்கு மட்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் கொரோனா பரவலின் சராசரி 1,058ஆக காணப்படுகிறது. பாதிப்புகள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, அக்டோபர் ஒன்றாம் தேதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்தது.
முடிவுக்கு வந்த ஊரடங்கு
அதேசமயம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமையில் தொடர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாடு தழுவிய முழு ஊரடங்கு முடிவுக்கு வந்ததால் பள்ளிகளை திறக்கலாம் என்றும், முதல்கட்டமாக 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மட்டும் திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் தொடக்கப் பள்ளிகள்
இதுதொடர்பாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்ஸ் கூறுகையில், கல்வி அமைச்சகம் மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளை முதலில் திறக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள் திறப்பது எப்பொழுது ? - விரிவான விளக்கம்
ஆசிரியர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
அதன்படி, வடக்கு மாகாணத்தில் உள்ள 680 பள்ளிகளை ஒரேநாளில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் இருந்து வரும் ஆசிரியர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்படும். ஆசிரியர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க மாகாண சபை நிதியை கொண்டு திட்டங்களை முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment