ஜெ., ஆன்மா சாந்தியடைய சசிகலா இதை பண்ணணும்: கே.பி.முனுசாமி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 18, 2021

ஜெ., ஆன்மா சாந்தியடைய சசிகலா இதை பண்ணணும்: கே.பி.முனுசாமி

ஜெ., ஆன்மா சாந்தியடைய சசிகலா இதை பண்ணணும்: கே.பி.முனுசாமி


சசிகலா அரசியல் பேசாமல் இருந்தால் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும் என்று கே.பி.முனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்தித்தது. கிட்டதட்ட அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுகவோ குறிப்பிட்ட சில ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் ஒன்றிரண்டு இடங்கள் தான் அதிமுகவுக்கு கிடைத்தது.
அதிமுகவின் தோல்வியைப் பயன்படுத்திக் கொண்டு சசிகலா கட்சிக்குள் நுழைய முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் கே.பி.முனுசாமி அது குறித்துப் பேசியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு பாராட்டு மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கந்தநேரியில் உள்ள மாவட்ட புறநகர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருந்தால் சசிகலா இனி அரசியல் பேசக்கூடாது. அவர் கட்சிக்கு தொண்டராக வரவில்லை, ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தவர். காமராஜர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கும் பலர் உதவியாளர்களாக இருந்துள்ளனர். அவர்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை.
ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவிடம் சேரும்போது 'நானோ, எனது உறவினர்களோ அரசியலில் ஈடுபட மாட்டோம்' என எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் மீண்டும் இணைந்தார். அந்த வாக்கை சசிகலா நிறைவேற்ற வேண்டும்.சசிகலா இனி அரசியல் பேசாமல் இருந்தாலே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும்” இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad