எலெக்ட்ரிக் கார் வாங்க போறீங்களா? பெஸ்ட் சாய்ஸ் இதுதான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 18, 2021

எலெக்ட்ரிக் கார் வாங்க போறீங்களா? பெஸ்ட் சாய்ஸ் இதுதான்!

எலெக்ட்ரிக் கார் வாங்க போறீங்களா? பெஸ்ட் சாய்ஸ் இதுதான்!



இந்தியாவில் தற்போது விற்பனையாகும் சிறந்த எலெக்ட்ரிக் கார்கள் இவைதான்... குறைந்த விலை, அதிக மைலேஜ்!
பெட்ரோல், டீசல் விற்கும் விலைக்கு வண்டியை ஓட்டுவதை விட நடந்தே போய்விடலாம் என்ற மனநிலைக்கு வாகன ஓட்டிகள் வந்துவிட்டனர். பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் - டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் போடுவதற்கே தினமும் பெரிய தொகையை செலவு செய்யவேண்டியதாக உள்ளது. இதனால் பெரும்பாலானோர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாது என்பதோடு பயன்பாட்டுக்கும் ஏதுவாக உள்ளதால் இனி வரும் காலங்களில் இந்த வகை வாகனங்கள்தான் சாலைகளில் அதிகமாக ஓடும் என்று தெரிகிறது.
எனவே நிறையப் பேர் இப்போது எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வாங்குவதாக இருந்தால் அதன் விலை என்ன, மைலேஜ் எவ்வளவு போன்ற விவரங்களைப் பார்க்க வேண்டும். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்களின் லிஸ்ட் இதோ...

Tata Nexon EV

விலை - ரூ.13.99 லட்சம் முதல்
மைலேஜ் - 312 கிலோ மீட்டர்
சார்ஜிங் டைம் - 60 நிமிடம் (80%)

MG ZS EV

விலை - ரூ.20.88 லட்சம் முதல்
மைலேஜ் - 340 கிலோ மீட்டர்
சார்ஜிங் டைம் - 8 மணி நேரம்

விலை - ரூ.11.99 லட்சம் முதல்
மைலேஜ் - 306 கிலோ மீட்டர்
சார்ஜிங் டைம் - 11.5 மணி நேரம்

Hyundai Kona Electric

விலை - ரூ.23.71 லட்சம் முதல்
மைலேஜ் - 452 கிலோ மீட்டர்
சார்ஜிங் டைம் - 57 நிமிடம்

Mahindra e-Verito

விலை - ரூ.10.11 லட்சம் முதல்
மைலேஜ் - 140 கிலோ மீட்டர்
சார்ஜிங் டைம் - 1 மணி 45 நிமிடம்

No comments:

Post a Comment

Post Top Ad