'வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக!' - மத்திய அரசை விமர்சித்த ஆளுநரால் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 18, 2021

'வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக!' - மத்திய அரசை விமர்சித்த ஆளுநரால் பரபரப்பு!

'வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக!' - மத்திய அரசை விமர்சித்த ஆளுநரால் பரபரப்பு!


மத்திய அரசுக்கு எதிராக ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியின் எல்லைகளில், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான விவசாயிகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்றும், தேவைப்பட்டால், சட்டங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்வதே ஒரே தீர்வு என, விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியதாவது:
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முடியாது.கேரளாவில் ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் வீடு... கலங்க வைக்கும் வீடியோ
நான் காஷ்மீர் ஆளுநராக இருந்த வரை காஷ்மீரில் எந்த இடத்திலும் பயங்கரவாத தாக்குதல்களோ, வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்களே நிகழவில்லை. தற்போது காஷ்மீரில் நடந்து வரும் சம்பவங்களை பார்த்தால், நிலவரம் தலைகீழாக சென்றுவிட்டது.
இவ்வாறு ஆளுநர் சத்யபால் மாலிக் பேசினார்.
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்ச்சியாக கருத்துக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad