திமுக அரசில் ஊழல்? அமைச்சர் மகன் கொண்டாடும் டெண்டர் தீபாவளி!
திமுக மீது புதிதாக ஊழல் புகார் ஒன்று எழத் தொடங்கியுள்ளது. இதை ஆரம்பத்திலேயே முதல்வர் ஸ்டாலின் கவனித்து நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியது, நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கியது, மாநில உரிமைகளை நிலைநாட்ட முனைப்பு காட்டுவது, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம், நகைக் கடன் தள்ளுபடி என முக்கிய
பணிகளில் சிறப்பாக செயல்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திமுக ஆட்சி மீது கடந்த காலங்களில் இருந்த புகார்கள், விமர்சனங்கள் இனி இருக்ககூடாது என ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். ஆனால் அதையும் கடந்து சில ஊழல் புகார்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
யாருக்கு டெண்டர்?
அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட வேண்டிய பொருள்களுக்கு டெண்டர் விடப்படுகின்றன. குறைவான விலையில் விரைவாகவும், தரமாகவும் பொருள்களை வழங்குவோர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலும் தமக்கு வேண்டிய நிறுவனங்களுக்கே டெண்டர்கள் கிடைக்கச் செய்வது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாறாமல் தொடர்கிற நிகழ்வாக உள்ளது.
சென்ற ஆண்டு நடந்தது என்ன?
போக்குவரத்துத் துறை சார்பில் அதன் ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஒரு கிலோ நெய் ஸ்வீட் 500ரூபாய் என்ற கணக்கில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் சில இடங்களில் அரைக் கிலோ ஸ்வீட் தான் கொடுக்கப்பட்டது தனிக் கதை.
அமைச்சர் மகனின் கமிஷன் ஆட்டம்!
இம்முறை அதைவிட குறைவான விலைக்கு ஆவின் நிறுவனத்திடம் டெண்டர் கொடுத்தால் பெரிய தொகையை மிச்சப்படுத்தலாம் அத்துடன் அரசின் மற்றொரு நிறுவனம் இதன் மூலம் பயன்பெறும்
என அதிகாரிகள் சிலர் யோசனை கூறியுள்ளனர். இதில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் முடிவெடுப்பதற்குள் அமைச்சர் மகன் திலீப் உள்ளே புகுந்து ஆட்டத்தை மாற்றியிருக்கிறாராம்.
அரசுக்கு இவ்வளவு நட்டம்!
ஸ்வீட் டெண்டரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வேறொரு தனியார் நிறுவனத்துடன் பேசியுள்ளதாக சொல்கிறார்கள். ஆவினில் வாங்கினால் ஒரு கிலோ நெய் ஸ்வீட்டை 420 ரூபாய்க்கு முடித்திருக்கலாம், ஆனால் அமைச்சர்
மகனோ சாதாரண ஆயில் ஸ்வீட்டை 600 ரூபாய்க்கு டெண்டர் பேசியிருப்பதாகவும் தனக்கு 30 சதவீதம் கமிஷன் வேண்டும் என கேட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். 100 டன் அளவுக்கு வாங்க வேண்டியிருப்பதால் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தலாம். ஆனால் அந்த தொகை கமிஷனாக மாறி அமைச்சரின் மகன் பாக்கெட்டுக்கு செல்கிறது என வேதனை தெரிவிக்கிறார்கள் பெயர் சொல்லாத அதிகாரிகள்.
No comments:
Post a Comment