காந்தி ஜெயந்தி அதுவுமாய்... போலீஸ் ஸ்டேஷன் அருகே இப்படியொரு அசிங்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

காந்தி ஜெயந்தி அதுவுமாய்... போலீஸ் ஸ்டேஷன் அருகே இப்படியொரு அசிங்கம்!

காந்தி ஜெயந்தி அதுவுமாய்... போலீஸ் ஸ்டேஷன் அருகே இப்படியொரு அசிங்கம்!




காவல் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் காந்தி ஜெயந்தி அன்றும் மது விற்பனை நடைபெற்றது பொதுமக்களை வேதனையடைய செய்துள்ளது.
காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை அமோகம், உள்ளேயே அமர்ந்து மது அருந்தும் மது பிரியர்கள் காவல் நிலையம் முன்பே அரங்கேறும் அவலம்.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையில் பார் உரிமையாளர்கள், காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை என்பதை கவனத்தில் கொள்ளாமல், முன் வாசலை திறந்து வைத்துக் கொண்டு சகஜமாக சட்டவிரோத மது விற்பனையை, துளியும் அச்சமில்லாமல் செய்து வந்தனர்.

இந்த கடைக்கு இரண்டு கட்டிடங்களுக்கு முன்தான் ஆதம்பாக்கம் காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையிலும்கூட மது விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பது காந்தியவாதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தினந்தோறும் சட்ட விரோத மது விற்பனை நடப்பது வாடிக்கை தான். ஆனால் காந்தி ஜெயந்தியன்று கூட விற்பனை நடப்பதை போலீசார் அனுமதிப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று மாவட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கக்கூடாது எனவும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad