திமுக அரசு மீது இப்படியொரு குண்டு; டிடிவி தினகரன் புதிய பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

திமுக அரசு மீது இப்படியொரு குண்டு; டிடிவி தினகரன் புதிய பரபரப்பு!

திமுக அரசு மீது இப்படியொரு குண்டு; டிடிவி தினகரன் புதிய பரபரப்பு!



 விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்று பெயரளவில் மட்டும் செயல்பட்டால் போதாது என்று டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அறுவடையாகும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை தமிழக அரசு நேற்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்ய வேண்டிய நிலம், சாகுபடி விவரங்கள் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவிட வேண்டும். இந்த விவரங்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆன்லைன் பதிவு முறை

அவர் அனுமதி அளித்த உடன் விவசாயிகளின் செல்போன் எண்ணிற்கு நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு எப்போது கொண்டு வர வேண்டும் என்ற எஸ்.எம்.எஸ் வரும். இந்த முறைக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் குத்தகை விவசாயிகள் என்பதால், அவர்களுக்கு நிலத்தின் பட்டா எண் கூட முழுமையாக தெரியாது. இந்த பதிவு செய்யும் முறை சாத்தியமற்றது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பழைய படியே விரைவாக கொள்முதல் செய்வது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விவசாயிகளை அலைக்கழிக்கும் விதமாக நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உட்பட தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறேன்.5000 பனை விதைகளை சமூக ஆர்வலர்களுக்கு அனுப்பி வைத்த உடற்கல்வி ஆசிரியர்!

ஏற்கனவே நேரடி கொள்முதல் நிலையங்களைப் போதுமான அளவிற்கு திறக்காததால், விவசாயிகள் கடும் இன்னலுக்கும், இழப்புக்கும் ஆளாகி வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகின்றன. இதையெல்லாம் சரிசெய்து விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தி.மு.க அரசு,
அதற்கு மாறாக நெல் கொள்முதலில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்து விவசாயிகளை மேலும் வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெயரளவுக்கு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது. விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுவதுதான் உண்மையான விவசாய நலன் என்பதை தி.மு.க அரசு உணருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad