கனமழை எதிரொலி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் நேற்று முன்தினமும் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை பள்ளி விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து
வருவதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அடுத்து நாளை கடலூர் மாவட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்றும் வீட்டிலேயே பத்திரமாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment