இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 26, 2021

இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட இரண்டாம் அலையால் இந்தியாவில் மக்கள் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதனால் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் உறுதிப்படுத்தியுள்ளது. ஏ.ஒய் 4.2 எனப்படும் இந்த புதிய வகை வைரஸ் இதுவரை 17 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad