வெற்றி வேட்பாளர்களுடன் புகைப்படம்; ஒரமாக ஒதுங்கிய விஜய்! – வைரலாகும் புகைப்படம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 27, 2021

வெற்றி வேட்பாளர்களுடன் புகைப்படம்; ஒரமாக ஒதுங்கிய விஜய்! – வைரலாகும் புகைப்படம்!

வெற்றி வேட்பாளர்களுடன் புகைப்படம்; ஒரமாக ஒதுங்கிய விஜய்! – வைரலாகும் புகைப்படம்!

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு புஸ்ஸி ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பலர் போட்டியிட்டனர். 155 இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 129 பேர் வெற்றி பெற்றதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை சந்தித்த நடிகர் விஜய் அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 70 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad